உலக நடப்புகள்புதியவை

கிரெடிட் கார்டு: கவனிக்கவேண்டிய கட்டணங்கள் பதிவு: ஜூன் 01, 2018 09:04

ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்

கிரெடிட் கார்டு எனப்படும் ‘கடன் அட்டை’, பலரை வசீகரிக்கும், பலரை பயமுறுத்தும் அட்டையாக உள்ளது.

ஆனால் கிரெடிட் கார்டுக்காக என்னென்ன கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்று தெரிந்துகொண்டால் அதைப் பெறலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம்.

அந்தக் கட்டணங்கள் பற்றி…

ஆண்டுக் கட்டணம்: கிரெடிட் கார்டு வழங்குவதற்கு பொதுவாக வங்கிகளும் நிதி அமைப்புகளும் எவ்விதக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்துவிட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கின்றன.

 

 

 

வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் செலவுத் தொகையை வங்கிக்கணக்கில் திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும்.

பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி .எம்.மில் பணம் எடுக்கலாம். ஆனால், இந்த வசதியை அவசரத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தால் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.

அதிகப்படியான செலவுக் கட்டணம்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அபராத கட்டணம் விதிக்கப்படும்.

கால தாமதக் கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமதக்கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற் படுத்தும். இதனால் நம் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும், அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

 

 

தொகை பரிமாற்றத்துக்கான கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கித் தொகையை இன்னொரு கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தும் பொழுது அதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.

Show More

Related Articles

Close