சமையல் குறிப்புகள்புதியவை

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு – மோர் கஞ்சி

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு - மோர் கஞ்சி

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – கால் கப்
தண்ணீர் – 1 கப்
மோர் – 1 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம் – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை :

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.

நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சூப்பரான கேழ்வரகு – மோர் கஞ்சி ரெடி.

Show More

Related Articles

Close